கோலாலம்பூர் 18 ஜூலை – ஒரு நாயின் பின்னங்கால்கள் வெட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பண்டான் இன்டா மெர்பாத்தி அபார்ட்மெண்ட் அருகே நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து because_of_you_2020 விலங்குகள் மீட்புக் குழு தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதோடு, இது குறித்து போலிஸ் புகார் செய்யப்பட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த கொடூர சம்பவத்தைப் புரிந்த சீன ஆடவன், நாயின் பின்னங்கால்களை தன்னிடமிருந்த கைப்பையில் கொண்டு சென்ற செயல், அவன் ஒரு மன நலம் பாதிக்கப்பட்டவனாய் இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கச் செய்கிறது.
இன்று ஐந்தறிவு ஜீவனுக்கு ஏற்பட்ட இந்த நிலை,நாளை மனிதனுக்கும் ஏற்படலாம்; எனவே இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் போலிஸில் விரைந்து புகார் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.