Latestமலேசியா

கேமரன் மலையில் சட்டவிரோத சுற்றுலா மையம் இடிக்கப்பட்டது

பாஹங், ஆக 6 – அதிகாரிகளின் அங்கீகாரமின்றி கேமரன் மலையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த சுற்றுலா மையம் ஒன்று கேமரன் மலை மாவட்ட மன்ற அதிகாரிகளால் நேற்று இடிக்கப்பட்டது. 1974ஆம் ஆண்டின் கால்வாய் மற்றும் கட்டிடத்துறை சட்டத்தின் கீழ் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிட பகுதியை அகற்றும் 70 ஆவது விதி உட்பிரிவு (1)இன் கீழ் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கேமரன் மலை மாவட்ட மன்ற முகநூல் பதிவில் தெரிவித்தது.

கேமரன் மலை நகரான்மைக் கழக தலைவர் அஸ்மில் ஹடிட் மஸ்னான் ( Azmil Hadid Maznan) தலைமையில் கேமரன்மலை நில மற்றும் மாவட்ட அலுவலகம், போலீஸ் அதிகாரிகள், பஹாங் அமலாக்கப் பிரிவு, கேமரன் மலை பொதுப் பணித்துறை , தெனாகா நேசனல் பெர்ஹாட் ஆகிய அதிகாரிகள் முன்னிலையில் அந்த சுற்றுலா கட்டிடத்தை இடிக்கும் நடவடிக்கை நேற்று காலை 9 மணிக்கு தொடங்கி 11.30 மணிவரை நடைபெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் திறக்கப்பட்ட இந்த சுற்றுலா மையம் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை அதிக அளவில் ஈர்க்கப்பட்ட இடமாக விளங்கியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!