Latestமலேசியா

தேசிய தினக் கொண்டாட்ட போட்டிக்கான போஸ்டரில் சர்ச்சைக்குரிய படம்; விசாரணையில் இறங்கிய பினாங்கு கல்வி இலாகா

ஜியோர்ஜ்டவுன், ஆகஸ்ட் -19, பினாங்கில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில், தேசிய தின கொண்டாட்ட மாதத்தையொட்டிய போட்டிக்கான போஸ்டரில் தவறான படம் இடம்பெற்ற சம்பவம் விசாரிக்கப்படுகிறது.

பினாங்கு கல்வி இலாகா அது குறித்து உள் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

பல்வேறு தரப்பினரின் மனதை புண்படுத்தியிருப்பதால், அச்சம்பவத்தைக் கடுமையாகக் கருதுவதாக அதன் இயக்குநர் டத்தோ அப்துல் சாயிட் ஹூசாயின் (Datuk Abdul Said Hussain) கூறினார்.

இணையத்திலிருந்து எடுக்கப்பட்ட template படத்தை, அப்போட்டிக்கான விளம்பர போஸ்டராகப் பயன்படுத்திய ஆசிரியரின் கவனக்குறைவுக்காக, தாம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக டத்தோ சாயிட் சொன்னார்.

தற்போதைக்கு விசாரணை சுமூகமாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்; இது போன்ற தவறுகள் மீண்டும் நடக்காதிருப்பதும் உறுதிச் செய்யப்படுமென்றார் அவர்.

சம்பந்தப்பட்ட பள்ளியின் Buku Scrap போட்டிக்கான விளம்பரத்தில் சீன நாட்டு இராணுவத்தின் படமிருந்தது கண்டு பலரும் அதிர்ச்சியடைந்ததோடு, சமூக ஊடகத்திலும் அது வைரலானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!