Latestமலேசியா

பேராக், சிலிம் ரிவரில் கனமழையால் ஏற்பட்ட நீர் பெருக்கு; இடிந்து விழுந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ‘Battle of Slim’ பாலம்

சிலிம் ரிவர், ஆகஸ்ட் -24 – பேராக், சிலிம் ரிவரில் பிரிட்டிஷ் மற்றும் ஜப்பானியக் காலனித்துவ ஆட்சியின் போது புகழ்பெற்ற Slim Village பாலம், சிலிம் ஆற்றில் ஏற்பட்ட திடீர் நீர் பெருக்கால் இடிந்து விழுந்துள்ளது.

நேற்று மாலை முதல் இடைவிடாமல் பெய்த மழைக்குப் பிறகு, 40 மீட்டர் நீளம் கொண்ட அப்பாலம் முழுவதுமாக இடிந்ததாக, முவாலீம் மாவட்ட பொது தற்காப்புப் படை (APM) கூறியது.

எனினும் அதில் எவரும் காயமடையவில்லை.

இதனால் அனைத்து ரக வாகனங்களும் பயணிக்க அது பாதுகாப்பானதாக இல்லை எனக் கருதி, Jalan Slim River – Behrang Hulu சாலை நேற்றிரவு 8 மணியிலிருந்து போக்குவரத்துக்கு மூடப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின் போது 1942-ஆம் ஆண்டு ஜனவரி ஏழாம் தேதி நடைபெற்ற ‘Battle Of Slim’ என்றழைக்கப்படும் போரின் ‘சாட்சியாக’ இந்த Slim Village பாலம் விளங்கியுள்ளது.

அதில் 1,000 பேர் கொல்லப்பட்டு, 23 கனரக பீரங்கிகள், 6 விமான எதிர்ப்பு துப்பாக்கிகள், 50 கவச வாகனங்கள் மற்றும் 550 இராணுவ போக்குவரத்து டிரக்குகள் அழிந்து, அப்பகுதி ஜப்பானிய இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் போனது வரலாற்றுச் சுவடாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!