கோலாலம்பூர், ஆகஸ்ட் 29 – ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவைப் பாதுகாப்பற்ற பகுதியாக அறிவிக்க இன்னும் நேரம் வரவில்லை என தேசிய காவல்துறை தலைவர் டான் ஸ்ரீ ரசாருடின் ஹூசைன் (Tan Sri Razarudin Husain) தெரிவித்தார்.
அவ்வாறு செய்ய, இந்த சம்பவத்தை பேரிடராக அறிவிக்க காவல்துறை தேசிய பாதுகாப்பு மன்றத்திடம் விண்ணப்பிக்க வேண்டும் என்றார், அவர்.
இது பேரிடர் அல்ல. ஆனால், காவல்துறையினர் உட்பட தீயணைப்புத் துறையினரும் அது தொடர்பான மற்ற துறையினரும், இச்சம்பவத்தைப் பேரிடராக கருதி பணிகளைச் செய்து வருவதாக கூறினார்.
அடுத்தடுத்த நில அமிழ்வு சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில், ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவிலிருந்து ஜாலான் ராஜா லாவுட் வரையிலான 1.4 மீட்டர் சாலை மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட சாலை மட்டுமே மூடப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளுக்கும் அவ்வாறு செய்ய உத்தரவு பிறப்பிக்கவில்லை.
வணிகம் நிறுத்தப்படவில்லை, பரிவர்த்தனைகள் வழக்கம் போல் நடந்து வருகின்றன என்றும் அவர் கூறினார்.
கழிவு நீர் குழாய்களுக்கான பாதை சுமார் 50 முதல் 70 மீட்டர்கள் மட்டுமே உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.