![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/09/MixCollage-10-Sep-2024-07-22-PM-6581.jpg)
பிந்துலு, செப்டம்பர்-10, சரவாக், பிந்துலுவில் அலுமினியம் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்றிரவு பெரும் தீயில் ஏற்பட்டது.
அலுமினிய உலோகத்தை உருக வைக்கும் போது ஏற்பட்ட கசிவால், தண்ணீருடன் வினைபுரிய முடியாமல் அச்சம்பவம் நிகழ்ந்ததாக தீயணைப்பு மீட்புத் துறை கூறியது.
சம்பவத்தின் போது அங்கு மழைப் பெய்து நிலைமை மோசமாகி, பெரிய வெடிப்பும் ஏற்பட்டது.
61 தொழிலாளர்களும் முன்னெச்சரிக்கையாக வெளியேறி பாதுகாப்பான இடத்தில் கூடியதால், அதில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
உருகிய உலோகங்கள் சூடு தணிந்த பிறகே அதன் மீது alumina தூளைத் தூவி தீயை அணைக்க முடியும்.
ஆனால், அங்கு தொடர்ந்து மழை பெய்ததால் காலை வரை அதனை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
பிறகு இன்று காலை 6.20 மணியளவில் உருகிய உலோககங்கள் முழுவதுமாக சூடு தணிந்ததும், மேற்கண்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தீயணைப்புத் துறை கூறியது.
அத்தீயில், மொத்த கட்டடத்தின் 10 விழுக்காட்டுப் பகுதி சேதமடைந்தது.
தீ ஏற்பட்டதற்கான உண்மைக் காரணமும், சேத விவரங்களும் மதிப்பிடப்பட்டு வருகின்றன.