![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/09/MixCollage-24-Sep-2024-06-04-PM-8789.jpg)
சுங்கை பட்டாணி, செப்டம்பர்-24, சட்டவிரோத மோட்டார் பந்தயங்களுக்காக மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களைக் கண்டால், பொது மக்கள் அவற்றைப் படம் பிடித்து சமூக ஊடகங்களில் வைரலாக்க வேண்டும்.
சட்டவிரோத மோட்டார் பந்தயங்களையும், mat rempit போன்ற சாலை அடாவடி கும்பல்களையும் முறியடிக்க அது அவசியமென, கெடா போலீஸ் தலைவர் ஃபீசோல் சாலே (Fisol Salleh) சொன்னார்.
இந்த mat rempit கலாச்சாரம் நெடுங்காலமாகத் தொடருகிறது.
அதனை துடைத்தொழிக்க வேண்டுமென்றால், பொது மக்கள் உட்பட அனைவரின் பங்களிப்பும் தேவை என்றார் அவர்.
எனவே, சட்டத்திற்குப் புறம்பாக மாற்றியமைக்கப்பட்ட கார்கள், மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள் போன்றவற்றை கண்டால், உடனடியாக படமெடுத்து வைரலாக்குமாறு கெடா மாநில மக்களை தாம் கேட்டுக் கொள்வதாக அவர் கூறினார்.
Tayar sotong பயன்பாடு, பிரேக்கை அகற்றி விடுவது, வேகமான இரைச்சலை எழுப்புவதற்காக கார்பூரேட்டரை (carburetor) தரமுயர்த்துவது என சாலைகளில் அவர்களின் அட்டகாசம் தாங்கவில்லை.
நீங்கள் படமெடுத்தோ அல்லது வீடியோ எடுத்தோ வைரலாக்குங்கள்; வீடு வரை தேடிச் சென்றாவது அவர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என ஃபீசோல் தெரிவித்தார்.