Latestமலேசியா

புற்றுநோய் கண்டறிதலுக்கு AI பயன்பாட்டை ஆய்வு செய்யும் சுகாதார அமைச்சு

கோலாலம்பூர், நவம்பர்-20, புற்றுநோய் கண்டறிதலுக்கு AI அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் சுகாதார அமைச்சு சில ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

நுரையீரல் புற்றுநோய் கண்டறிதலுக்கான AI மதிப்பீடும் அதிலடங்கும் என அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்ளி அஹ்மாட் (Datuk Seri Dr Dzulkefly Ahmad) தெரிவித்தார்.

நெஞ்சு X-Ray வழியாக புற்றுநோயைக் கண்டறிவதில் கதிரியக்க நிபுணர்களுக்கு AI எந்த அளவுக்கு ஆக்கப்பூர்வமாக உதவுகிறது என்பதை அந்த ஆய்வு மதிப்பீடு செய்யும்.

இதுவரையிலான ஆய்வின் படி, நுரையீரல் முடிச்சுகளை மேலும் துல்லியமாகவும் விரைவாகவும் கண்டறிய உதவுவதில், AI தொழில்நுட்பம் நிபுணர்களுக்கு இரண்டாவது கண்ணாக (second reader) செயல்பட முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விரிவான கள ஆய்வு தற்போது தேசியப் புற்றுநோய் கழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அடுத்தடுத்து சைபர்ஜெயா மருத்துவமனை, காஜாங் மருத்துவமனை, புத்ராஜெயா மருத்துவமனைகளுக்கு அது விரிவுப்படுத்தப்படுமென, மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போது அமைச்சர் சொன்னார்.

Mammogram சோதனை வாயிலாக மார்பகப் புற்றுநோயைக் கண்டறிவதிலும் AI பயன்பாடு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!