செகாமாட், டிசம்பர் -5, ஜோகூர், செகாமாட், கம்போங் போகோ தெங்காவில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மூவர், வேறு வழியின்றி தாங்கள் பயணித்த Toyota Alphard வாகனத்தின் கூரையில் ஏறிகொண்டனர்.
சுமார் 40 நிமிடங்களுக்குப் பிறகு அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக மாவட்ட பொது தற்காப்புப் படை கூறியது.
40 முதல் 60 வயதிலான அம்மூவரும், GPS தடங்காட்டியைப் பின்பற்றி அங்கு சிக்கிக் கொண்டதாகக் கூறிக் கொண்டனர்.
ஜோகூர், பெக்கோவிலிருந்து (Bekok) நெகிரி செம்பிலான், குவாலா பிலா செல்லும் வழியில், GPS-சை மட்டுமே நம்பியதால் அவர்கள் பயணித்த வாகனம் வெள்ள நீரில் புகுந்து விட்டதாம்.
வெள்ள நீர் மட்டம் 0.2 மீட்டர் ஆழத்திற்கு இருந்ததால், அச்சாலை இலகுரக வாகனங்களுக்கு மூடப்பட்டதும் அவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டதாக அதிகாரிகள் கூறினர்.