Latestமலேசியா

iPhone விலைகளை Apple 43% வரை உயர்த்தலாம்; WSJ தகவல்

கோலாலம்பூர், மே-13 – Apple இவ்வாண்டுக்கான தனது அடுத்த புதிய iPhone கைப்பேசிகளின் விலைகளை உயர்த்த எண்ணியுள்ளது.

ஆனால் இந்த உயர்வை சீனாவிலிருந்து வரும் இறக்குமதிகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரிகளுடன் தொடர்புபடுத்துவதை அந்நிறுவனம் தவிர்க்க விரும்புவதாக, Wall Street Journal தகவல் தெரிவித்துள்ளது.

வரி விதிப்பால், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளுக்கு இடையூறு ஏற்பட்டு, தனது உற்பத்தியை பேரளவில் இந்தியாவிற்கு மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு Apple தள்ளப்பட்டுள்ளது.

இதனால் அதிகரிக்கும் செலவுகளைக் குறைக்க, கைப்பேசிகளின் விலைகளை உயர்த்துவது ஆப்பிள் நிறுவனத்திற்கு பெரிதும் உதவுமென WSJ கூறியது.

வரி விதிப்பால், இந்த ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் கூடுதலாக 900 மில்லியன் டாலர் வரை செலவுகள் இருக்குமென Apple ஏற்கனவே கணித்திருக்கிறது.

இதனால், பெரும்பாலான iPhone-களை இந்தியாவில் தயாரித்து அமெரிக்கச் சந்தைக்கு கொண்டு வர Apple திட்டமிடுகிறது.

என்ற போதிலும் Apple-லின் விலை உயர்வுத் திட்டம் அதன் சந்தைப் பங்கிற்கு பாதிப்பைக் கொடுக்கலாம் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

காரணம், Samsung போன்ற அதன் நேரெதிர் போட்டியாளர்கள் AI அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை ஈர்க்க முயலுகின்றனர்.

இந்த நிலையில், iPhone-களின் விலை உயர்வு அதற்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதே அவர்களின் வாதம்.

799 டாலர் என்ற ஆரம்ப விலை கொண்ட iPhone 16 கைப்பேசிகள், புதிய வரிகளால் 43 விழுக்காடு அல்லது 1,142 டாலர் வரை உயரலாம் என Rosenblatt Securities கணித்திருக்கிறது.

எனினும், இந்த தகவலுக்கு Apple உடனடியாக பதில் அளிக்கவில்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!