Latestஉலகம்

டொனால்ட் டிரம்பிற்காக, மெக்டொனல்ட்ஸ் லாரியை வரவழைத்த சவுதி அரேபிய அரசு

ரியாத் சவுதி அரேபியா, மே 15- இந்த வாரம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம், வளைகுடா நாட்டிற்கான பயணத்தை மேற்கொண்டபோது, சவுதி அரேபிய அரசு, அவருக்காக நடமாடும்
மெக்டொனல்ட்ஸ் (McDonald’s) லாரியை ரியாத்திற்கு (Riyadh) வரவழைத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

டிரம்ப் இதற்கு முன்பு பல முறை மெக்டொனால்டு (McDonald’s) தனக்கு மிக பிடித்த துரித உணவு என்பதை வலைத்தளங்களில் ஆங்காங்கே பதிவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் டிரம்ப், பெரும்பாலும் தனது விமான பயணத்தின்போது, மெக்டொனால்ட் உணவுகளையே உட்கொள்ளும் விவரங்கள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் டயட் கோக் (Diet Coke) அவருக்கு மிகப்பிடித்த பானம் எனவும் ஒரு நாளைக்கு 12 பாட்டில்களுக்கு மேல் அவர் அதை அருந்துவார் எனவும் கூறப்படுகின்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!