Latestமலேசியா

கெரிக்கில் MPV வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்; ஒருவர் பலி, 4 பேர் காயம்

கெரிக், மே-31 – கெரிக்-குப்பாங்-கெரிக் சாலையில் இன்று காலை 2 MPV வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், ஒருவர் பலியானார்.மேலும் நால்வர் காயமடைந்ததாக கெரிக் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் ஃபிர்டாவ்ஸ் அப்துல்லா கூறினார்.

49 வயது ஆடவர் ஓட்டிச் சென்ற Nissan Grand Livina MPV, கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் புகுந்தது.அதில் 56 வயது மாது, 21 வயது இளைஞர் மற்றும் 14 வயது சிறுவன் இருந்துள்ளனர்.

இந்நிலையில் எதிர் திசையில் 32 வயது ஆடவர் ஓட்டி வந்த Perodua Alza MPV-யுடன் அது மோதியது. அக்காரில் 32 வயது மனைவி, முறையே 3, 5 வயதிலான இரு பிள்ளைகள் ஆகியோர் இருந்தனர்.

விபத்தில் படுகாயாமடைந்த Nissan Grand Livina ஓட்டுநர் கெரிக் மருத்துவமனையில் மரணமடைந்தார். அதே காரிலிருந்த மாதுவுக்கு விலா எலும்புகள் முறிந்து தைப்பிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மற்ற 2 பயணிகளும் காயமடையவில்லை.

Perodua Alza MPV ஓட்டுநரும் படுகாயமடைந்து தைப்பிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரின் இரு பிள்ளைகளுக்கு கண்களிலும் தலையிலும் அடிபட்டது. அவரின் மனைவிக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை .

ஆபத்தான முறையில் வாகனமோட்டியதாக அச்சம்பவம் விசாரிக்கப்படுவதாக ஃபிர்டாவ்ஸ் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!