
ஷா ஆலாம், ஜூன் 3 – சிலாங்கூரில் மின் சிகரெட்டுகளின் விற்பனைக்கு தடையை அமல்படுத்துவதற்கு முன், மின் சிகரெட் வணிகத்தினர் உட்பட பல்வேறு தரப்பினரின் கருத்துகளுக்காக மாநில அரசு காத்திருக்கின்றதென்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியுள்ளார்.
மிகச் சிறிய அளவில் மின் சிகரெட் பயன்படுத்தப்பட்டாலும், அதன் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, மாநில அரசு இவ்வாறு செயல்படுவதாகவும் தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாமல் மின் சிகரெட்டுகளின் விற்பனைக்கு தடை விதிக்க மாநில அரசு விரும்பவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
இதனிடையே, மாநில அரசு இன்று சிலாங்கூர் காவல்துறைக்கு 10 மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்கியது.
இதற்கு முன்பு, COVID-19 தொற்றின் போது காவல்துறைக்கு மின்சார மோட்டார் சைக்கிள்களை மாநில அரசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.