
கோலாலாம்பூர் – ஜூன்-12 – நாட்டில் 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 80,000 மாணவர்களைக் குறி வைத்து Cybersafe in Schools அல்லது பள்ளிகளில் இணையப் பாதுகாப்பு என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மலேசிய இந்தியச் சமூகத்தின் உருமாற்றப் பிரிவான மித்ரா மற்றும் CSM எனப்படும் CyberSecurity Malaysia ஒத்துழைப்பில் இது நடைபெறுகிறது
இத்திட்டத்தை, கூட்டரசு பிரதே அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சாலிஹா முஸ்தாஃபா இன்று கோலாலாம்பூர், தம்புசாமி பிள்ளை தமிழ்ப் பள்ளியில் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். மித்ரா தலைவரும் பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான பி.பிரபாகரனும் இதில் பங்கேற்றார்.
இணையப் பகடிவதை, இணையம் வாயிலான பாலியல் குற்றங்கள், பொய்ச் செய்தி பரவல் மற்றும் சமூக ஊடகங்களின் தவறான பயன்பாடு போன்ற இணைய அச்சுறுத்துல்கள் குறித்து,
10 முதல் 17 வயது மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இணையத்தைப் பாதுகாப்பாக பயன்படுத்தும் முறை, நீண்ட நேரம் இணையத்தில் செலவிடுவதால் ஏற்படும் விளைவுகள், கடவுச் சொல் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் மாணவர்களுக்கு தெளிவான விளங்கங்களுக்கும் குறிப்புகளும் இதில் வழங்கப்படும்.
இணையக் குற்றங்களால் பாதிக்கப்பட்டால் எங்கு புகாரளிப்பது யாரிடம் உதவிக் கேட்பது போன்ற தகவல்களும் வழங்கப்படும். 10 முதல் 17 வயது மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில், இரு வழி தொடர்பு அணுகுமுறையில் பயிற்சிகள் நடைபெறும்.
இத்திட்டத்தின் இறுதியில் ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் 3 முதல் 4 மாணவர்கள் CyberSAFE திட்டத்தின் சிறார் தூதர்களாக தேர்ந்தெடுக்கப்படுவர். தத்தம் பள்ளிகளில் தங்களின் சகாக்களிடமுன் இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வை பரப்ப, அவர்களுக்கு உரிய பயிற்சிகளும் ஆதரவும் வழங்கப்படும்.
உச்சக்கட்டமாக, இந்த சிறார் தூதர்கள் CyberSAFE தேசிய மாநாட்டுக்கு அழைக்கப்பட்டு சிறப்பு செய்யப்படுவர் என மித்ரா இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.