
கோலாலம்பூர், ஜூலை 4 – கோலாலம்பூர், ஜாலான் கொக்ரெய்னில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 அங்காடிக் கடைகள் அழிந்ததோடு மேலும் 4
அங்காடிக் கடைகள் சேதம் அடைந்தன.
இன்று காலை மணி 8.18 அளவில் அவசர அழைப்பு கிடைத்தவுடன் புடு மற்றும் ஹங் துவா தீயைணைப்பு நிலையங்களைச் சேந்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக கோலாலம்பூர் தீ மற்றும் மீட்புத்துறை தெரிவித்தது.
இரண்டு தீயணைப்பு வண்டிகளைச் சேர்ந்த 16 தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் ஏழு கடைகளில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கோலாலம்பூர் தீயணைப்பு மீட்புத்துறையின் நடவடிக்கைக்கான முதிர் நிலை அதிகாரி Nur Zahela Mohamad Zainal தெரிவித்தார்.
5க்கு 7 சதுரஅடியைக் கொண்ட அங்காடிக் கடைகளில் மூன்று முழுமையாக தீயில் அழிந்ததோடு இதர நான்கு கடைகள் 20 விழுக்காடு சேதம் அடைந்தன .