
கோலாலம்பூர், ஜூலை-12 – மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று அதிகாலை கோலாலம்பூர் Jalan Gallagher சாலையின் தூய்மையை நேரில் கண்காணிக்க 3.2 கிலோ மீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டார்.
அதன் போது கண்ணில் கண்ட காட்சிகள் அவரை முகம் சுளிக்க வைத்தன.
அடைத்துக் கொண்ட கால்வாய்கள், சாலையோரக் குப்பைக் கூளங்கள் போன்றவை குறித்து அவர் கவலைத் தெரிவித்தார்.
சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்படுவதால் ஏடிஸ் கொசுக்களின் இனவிருத்தி மட்டும் நடைபெறுவதில்லை; வட்டார மக்களுக்கும் அது ஆரோக்கியக் கேட்டை விளைவிக்கும்.
தவிர, ஆங்காங்கே மரக்கிளைகள் விழுந்து கிடப்பது வாகனமோட்டிகளுக்கு குறிப்பாக மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு இரவு நேரங்களில் ஆபத்தாய் முடியலாம் என மாமன்னர் எச்சரித்தார்.
எனவே சுற்றுப்புற குடியிருப்பாளர்களுக்கு அவ்விடம் தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிச் செய்ய, உடனடி துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
அந்த அதிரடிச் சோதனைகளில் இஸ்தானா நெகாராவின் முக்கிய அதிகாரிகள் உடன் சென்றனர்.