
கோலாலம்பூர், ஜூலை 14 – கிள்ளான் மற்றும் ஷா ஆலமைச் சுற்றியுள்ள மூன்று தனித்தனி இடங்களில், சிலாங்கூர் குடிநுழைவுத்துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 24 சட்டவிரோத குடியேறிகளை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிள்ளான் பண்டார் புக்கிட் ராஜாவிலுள்ள முடிதிருத்தும் கடை, தாமான் சவுஜானாவிலுள்ள உணவகங்கள் மற்றும் ஷா ஆலம் பிரிவு 7 ஆகிய இடங்களில் அச்சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதென்றும் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் இந்தியா, மியான்மர் மற்றும் இலங்கையைச் சார்ந்தவர்கள் என்றும் குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட அனைவரிடத்திலும் கடைப்பிதழ்கள் இல்லாத காரணத்தால் இந்த வழக்கு குடியேற்றச் சட்டத்தின் கீழ் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்று சிலாங்கூர் குடிநுழைவுத்துறை அறிவித்துள்ளது