
கோலாலம்பூர், ஜூலை 28 – கோலாலம்பூர், ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா பகுதியில் பாகிஸ்தானியர் ஒருவரால் நடத்தப்பட்டு வந்த உணவகம் ஒன்றில், பெர்மிட் இல்லாத வெளிநாட்டு தொழிலாளர்களைப் பணியமர்த்திய குற்றம் தொடர்பில் வந்த புகாரை உறுதிப்படுத்த குடிநுழைவுத்துறை அதிகாரிகள் அதிரடி பரிசோதனையை மேற்கொண்டனர்.
30 வயதுடைய அந்த பாகிஸ்தானிய உணவக உரிமையாளர், தமது உணவகம் தனது மனைவியின் பெயரில் இயங்கி வருவதாகவும், உணவகத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு பெர்மிட் இல்லை என்பதையும் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டார்.
சம்பந்தப்பட்ட நபர் குடிநுழைவுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு லாரியில் ஏற்றப்பட்டபோது பீதியடைந்து, கத்தி ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கினார்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட நபரின் மனைவி தனது கணவரை விடுவிக்க வேண்டுமென்றும் சிறு குழந்தையை வைத்திருப்பதால் தமக்கு மிகவும் கடினமாக இருக்குமென்றும் அதிகாரிகளிடம் நிலைமையை எடுத்து விளக்கியிருக்கின்றார்.