
பாசீர் மாஸ், ஜூலை 30 – பாசீர் மாஸ் ,கம்போங் ரெபெக்கில் ஏழு மாத கர்ப்பினி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கான தடுப்புக் காவல் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 6 ஆம்தேதிவரை மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு உதவும் பொருட்டு அந்த சந்தேகப் பேர்வழியை தடுத்து வைக்கும் உத்தரவை நீட்டிப்பதற்கு மாஜிஸ்திரேட் பாரிட் சைட் அலி ( Syed Farid Syed Ali ) அனுமதி வழங்கினார்.
தண்டனை சட்டத்தின் 302 ஆவது பிரிவின் கீழ் கொலை குற்றம் தொடர்பாக விசாரணையை தொடர்வதற்காக இரண்டு ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த அந்த சந்தேக பேர்வழி அண்மையில் கைது செய்யப்பட்டான் .
லோக்காப் சீருடையுடன் அந்த ஆடவன் பாசீர் மாஸ் நீதிமன்ற வளாகத்திற்கு இன்று காலை மணி 8.42க்கு போலீஸ் வாகனத்தில் கொண்டு வரப்பட்டான் . ஒரு வர்த்தகரான 26 வயதுடைய பாரா எமிரா மஸ்லான் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி தனது வாகனத்தின் ஓட்டுனர் இருக்கையில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் இறந்து கிடந்தார்.