
காஸா, ஜூலை 31 – மனிதாபிமான உதவிக்காக வரிசையில் நின்ற மக்கள் மீது இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வடக்கு பாலஸ்தீனப் பகுதியில் குறைந்தது 30 பாலஸ்தீனர்கள் இஸ்ரேலின் ‘தந்திரோபாய இடைநிறுத்தம்’ நான்காவது நாளாக நீடித்து வந்தாலும், காஸா மக்களின் வாழ்க்கை பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக ஐ.நா மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
நிலைமையை மோசமாக்கும் வகையில், பாலஸ்தீனர்கள் உதவி பெற முயற்சிக்கும்போது, யூத ராணுவ அடக்குமுறைக்கும் கொடுமைக்கும் அப்பாவி பாலஸ்தீன மக்கள் பலியாகி வருகின்றனர்.வடக்கு காசாவில் உதவிக்காகக் காத்திருந்த குடியிருப்பாளர்கள் மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 300 பேர் காயமடைந்ததாக காசா சிவில் பாதுகாப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மாமுட் பஸால் ( Mahmud Bassal ) தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து தனது துறைக்கு 35 உடல்கள் கிடைத்திருப்பதாக காசாவில் உள்ள அல்-ஷிபா ( Al- Shifa) மருத்துவமனையின் இயக்குனர் முகமட் அபு சல்மியா ( Mohammad Abu Salmiya ) தெரிவித்தார். மனிதாபிமான உதவிப் பொருட்களை கொண்டுவரும் டிரக்குகள் Zikim வட்டாரத்தில் நுழைந்தபோது இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடந்துள்ளது.