
கிளந்தான், செப்டம்பர் 18 – கிளந்தான், பாச்சோக் பகுதியில் கார்ட்டூன் உடை அணிந்த நிலையில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்தில் கைதான ஆடவன் அக்குற்றத்தை நேற்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளான்.
கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி அன்று மாலை வேளையில் பாசோக், பந்தாய் இராமா விளையாட்டு பூங்காவில் அந்நபர் இக்குற்றத்தைப் புரிந்துள்ளான்.
குழந்தைகள் மீதான பாலியல் குற்றச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தது 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், பிரம்படியும் விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் நீதிமன்றம் அக்குற்றவாளிக்கு ஜாமீன் வழங்க மறுத்து, வரும் அக்டோபர் 23-ஆம் தேதியன்று தண்டனை விதிக்கும் நாளாக நிர்ணயித்துள்ளது.