
கோலாலம்பூர், அக்டோபர்-11,
நாட்டின் பல பள்ளிகளில் influenza காய்ச்சல் பரவியுள்ளதை சுகாதார அமைச்சான KKM உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையைச் சமாளிக்க கல்வி அமைச்சான KPM-முடன் ஆலோசனை நடத்தப்படும் என KKM கூறியது.
பள்ளிகளில் நோய் பரவலைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், மாணவர்களின் உடல் பரிசோதனை, சுத்தம் மற்றும் சுகாதார நடைமுறைகள், தேவைப்பட்டால் பள்ளி அட்டவணை மாற்றங்கள் உள்ளிட்டவைப் பற்றி அச்சந்திப்பில் ஆலோசிக்கப்பட உள்ளதாக, அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.
மாணவர்களிடம் காணப்படும் காய்ச்சல் மற்றும் சளி அறிகுறிகள் குறித்து பெற்றோர்களும் ஆசிரியர்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், பள்ளிகளை எச்சரிக்கையுடன் இருக்குமாறும், நோய் அறிகுறிகள் கொண்ட மாணவர்களை உடனே மருத்துவரை சந்திக்கவும் KKM அறிவுறுத்தியது.
மேலும், அனைவரும் கை கழுவுதல், சுவாசக் கவசம் அணிதல், மற்றும் நோய்க்குறிகள் இருந்தால் வீட்டிலேயே ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
நாட்டில் கடந்த வாரம் influenza A மற்றும் inluenza B காய்ச்சலை உட்படுத்தி 97 கிளஸ்டர் தொற்று பதிவாகியது; அதில் பெரும்பாலானவை பள்ளிகளில் பதிவாகியது குறிப்பிடத்தக்கது.



