
கோலாலம்பூர், அக் 14 –
நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உயர் இயந்திர ஆற்றலைக் கொண்ட டீ பிக் ரைடர் கிளப்பைச் சேர்ந்த சுமார் 50 மோட்டார் சைக்கிளோட்டிகைள் தீபத் திருநாளை முன்னிட்டு அண்மையில் சிலாங்கூ ஜிஞ்ஜாரோம் மஹா அன்பு ஆதரவற்றோர் இல்லத்திற்கு வருகை புரிந்தனர்.
தீபாவளி நெருங்கிவரும் இவ்வேளையில் அங்கு இருந்துவரும் ஆதரவற்றோருக்கு உதவும் வகையில் மெத்தை ,நாற்காலி மற்றும் காசோலையும் அவர்கள் வழங்கினர்.
இதுதவிர அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியிருக்கும் 2 முதல் 17 வயதுடைய 41 சிறார்களுக்கு தீபாவளி அன்பளிப்பு மற்றும் உணவுகளையும் வழங்கி டீ பிக் ரைடர் கழகத்தினர் அவர்களை மகிழ்வித்தனர்.
அதற்கு முன்னதாக அந்த மோட்டார் சைக்கிளோட்டிகள் பத்துமலையில் கூடி அங்கிருந்து ஆறு பிரிவாக தங்களது பயணத்தை ஜிஞ்ஜாரோம் மஹா அன்பு ஆதவற்ற இல்லத்திற்கு தொடங்கினர்.
ஆதரவற்ற இல்லங்கள் மற்றும் உதவி தேவைப்படும் தமிழ்ப்பள்ளிகளுக்கு உதவி வழங்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இம்முறை மஹா அன்பு ஆதரவற்ற இல்லத்திற்கு தங்களது ஆதரவுக்கரம் அமைந்ததாக அக்குழுவைச் சேர்ந்த கார்த்தீபன் முகுந்தவர்மன் தெரிவித்தார்.



