Latestமலேசியா

பூப்பந்துப் போட்டியில் 2027 முதல் அதிரடி மாற்றம்: 21 புள்ளி முறை நீக்கப்பட்டு 15 புள்ளி முறைக்கு ஒப்புதல்

ஹோர்சன்ஸ் (டென்மார்க்), ஏப்ரல்-26-பூப்பந்து உலகில் ஒரு மிகப்பெரிய மாற்றமாக, காலத்திற்கு ஏற்ப விளையாட்டை நவீனப்படுத்தும் நோக்கில், புதியப் புள்ளி முறையை அறிமுகப்படுத்த உலகப் பூப்பந்து சம்மேளனமான BWF ஒப்புதல் அளித்துள்ளது.

டென்மார்க்கில் நடைபெற்ற BWF வருடாந்திர கூட்டத்தில் இதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில், தற்போது நடைமுறையில் உள்ள 21 புள்ளிகள் கொண்ட ஆட்ட முறைக்கு பதிலாக, இனி ‘3×15’ அதாவது 15 புள்ளிகள் கொண்ட 3 செட் ஆட்ட முறை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இப்புதிய விதிமுறை வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வருகிறது.

2006-ஆம் ஆண்டு முதல் கடந்த 20 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்த 21 புள்ளி முறை இதன் மூலம் முடிவுக்கு வருகிறது.

​அடுத்தத் தலைமுறை இரசிகர்களைக் கவரும் வகையிலும், ஆட்டத்தை இன்னும் விறுவிறுப்பாக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக BWF தலைவர் தெரிவித்துள்ளார்.

புள்ளிகள் குறைந்தாலும், ஆட்டத்தின் நுணுக்கங்களும் வீரர்களின் திறமையும் மாறப்போவதில்லை என அவர் உறுதியளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!