Latestமலேசியா

உணவகங்கள் & கார் கழுவும் மையங்களில் ஜோகூர் குடிநுழைவு துறை அதிரடிச் சோதனை; ஆவணமில்லா 32 பேர் கைது

ஜோகூர் பாரு, அக்டோபர்-15,

ஜோகூர் பாருவில் குடிநுழைவுத் துறை நடத்திய அதிரடிச் சோதனையில், ஆவணமற்ற 32 வெளிநாட்டவர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.

‘Ops Selera’, ‘Ops Minyak’, ‘Ops Sapu’ என பெயரிடப்பட்ட இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகள், உணவகங்கள் மற்றும் கார் கழுவும் மையங்களில் சட்டவிரோதமாக வேலை செய்பவர்களை குறி வைத்து மேற்கொள்ளப்பட்டன.

மொத்தம் 96 வெளிநாட்டவர்கள் பரிசோதனை செய்யப்பட்டதில், முறையான பயணப் பத்திரம் அல்லது வேலை பெர்மிட் இல்லாத 32 பேர் கைதாகி தடுத்து வைக்கப்பட்டனர்.

இவர்கள் குடிநுழைவு விதிமீறல் காரணமாக மட்டுமே கைதுச் செய்யப்பட்டுள்ளனர்; குற்றவியல் வழக்குகளுக்காக அல்ல…

அனைத்து நடைமுறைகளும் சட்டப்படி நீதிமன்றத்தில் தொடரப்படும் என குடிநுழைவுத் துறை விளக்கியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!