
ஈப்போ, அக்டோபர்-17,
பேராக் – பஹாங் எல்லையில் உள்ள கூனோங் லியாங் (Gunung Liang) மலையில் 2 நாட்களாக காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஓர் ஆடவர், நேற்று முன்தினம் மலை உச்சியில் இறந்துகிடக்கக் கண்டெடுக்கப்பட்டார்.
இறந்தவர் 34 வயது மலையேறியான
Mustaqim Mansor என அடையாளம் கூறப்பட்டது.
10 நண்பர்களுடன் அக்டோபர் 10-ஆம் தேதி Fraser’s Hill மலையில் அவர் மலைப்பயணம் தொடங்கியுள்ளார்.
அக்டோபர் 14-ஆம் தேதி பயணம் நிறைவுப் பெற்றிருக்க வேண்டிய நிலையில், Mustaqin குழுவிலிருந்து காணாமல் போனார்.
இதையடுத்து, போலீஸ், வனத்துறையினர், UPSI பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட 22 பேர் தேடி மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
கடைசியில் புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு மலை உச்சியில் அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
மோசமான வானிலையால் ஹெலிகாப்டர் மூலமாக உடலைக் கீழே கொண்டு வரும் முயற்சி தடைப்பட்டு நேற்று காலை தொடரப்பட்டது.



