
கேரளா, டிசம்பர் 22 – பொதுவாகவே இந்தியாவிலுள்ள பெரும்பாலான ஆலயங்களில் உள்ளே சென்று புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதையும் மீறி கேரளா திருவனந்தபுரம் பத்மநாத சுவாமி திருக்கோவிலில் சிங்கப்பூரைச் சார்ந்த சுற்றுப்பயணி ஒருவர், மூக்குக்கண்ணாடியில் பொருத்தப்பட்ட நவீன கேமராவை கொண்டு, கோவில் பிரகாரத்தை வீடியோ எடுத்துள்ளார்.
இதனை கண்டறிந்த ஆலய நிர்வாகம் போலீசில் புகாரளித்து அவரை கைது செய்துள்ளது.
ஸ்மார்ட் கடிகாரம், கைப்பேசி, கேமரா போன்ற மின்னனு சாதனங்கள் ஆலய நுழைவாயிலிலுள்ள பேழையில் வைத்து விட்டுதான் ஆலயத்தினுள் செல்ல வேண்டும்.
ஆனால் அச்சுற்றுலா பயணி, விதிகளை மீறி கோவிலின் வடக்கு கோபுரம் மற்றும் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை வீடியோ.



