
தமிழ்நாடு, பிப்ரவரி 3 – அண்மையில் தூய்மை பணியின் போது குப்பையில் கிடைத்த 45 சவரன் தங்க நகைகளை எந்த லாபநோக்கமும் இன்றி உரியவரிடம் ஒப்படைத்த திருமதி பத்மாவின் நேர்மை, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சமூகத்திற்கு முன்மாதிரியாக அமைந்த இந்த மனிதநேயச் செயலை பாராட்டும் விதமாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திருமதி பத்மாவை நேரில் அழைத்து, அவருக்கு தங்கச் சங்கிலி அணிவித்து கௌரவித்தார்.
இந்நிலையில் கடினமான வாழ்க்கைச் சூழலிலும், நேர்மையை கைவிடாமல் இருந்த திருமதி பத்மாவின் செயல், “நேர்மை இன்னும் உயிருடன் உள்ளது” என்பதற்கு ஒரு வலுவான சாட்சி எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.



