
அலோர்ஸ்டார், பிப் 5 – கட்டாய உழைப்பு சுரண்டல் மற்றும் மனித கடத்தலுக்கு ஆளானதாக சந்தேகிக்கப்படும் நான்கு இந்தோனேசியப் பெண்களை கெடா குடிநுழைவுத் துறை வெற்றிகரமாக மீட்டுள்ளது.
மாநில குடிநுழைவு நடவடிக்கைப் பிரிவின் பொதுமக்கள் புகார் மற்றும் உளவுப் பிரிவுக்கு கிடைக்கப் பற்ற தகவல்களின்
அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பதிவு செய்யப்படாத வெளிநாட்டு பணிப்பெண் முகவர்கள் கும்பலின் நடவடிக்கைகளை முறியடிக்க நேற்று முதல் நாளும் நேற்றும் இந்த அதிரடி நடடிவக்கை மேற்கொள்ளப்பட்டது.
முதல் சோதனையில் , ஒரு வளாகத்தில் அடைக்கப்பட்டிருந்த நான்கு இந்தோனேசிய பெண்கள் மீட்கப்பட்டனர்.
அவர்கள் பணிப்பெண்களாக வேலை செய்ய சுரண்டப்பட்டதோடு , வேலை நோக்கங்களுக்காக மட்டுமே வெளியே அனுமதிக்கப்பட்டதாக தொடக்கக்கட்ட விசாரணையில் கணிடறியப்பட்தாக கெடா குடிநுழைவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களின் கடப்பிதழ் மற்றும் அவர்களின் கைதொலைபேசிகளை இந்த மோசடிக் கும்பல் பறிமுதல் செய்ததோடு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதல் நேரத்திற்கு வேலை செய்யும்படியும் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இரண்டு நடவடிக்கையில் மேலும் 8 இந்தனோசிய பெண்கள் குடிநுழைவு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். இதனிடையே அவர்களில் ஐவருக்கு முதலாளியாக செயல்பட்டதாக ஒப்புக்கொண்ட உள்நாட்டு பெண்
ஒருவரும் கைது செய்யப்பட்டார்.



