Latestமலேசியா

இன்று முதல் SARA RM100 உதவித்தொகையின் தகுதி சரிபார்ப்பு தொடங்கியது

கோலாலம்பூர், பிப்ரவரி 5 – இன்று முதல் SARA 100 ரிங்கிட் உதவித்தொகைக்கான தகுதி சரிபார்ப்பைப், பொதுமக்கள் sara.gov.my என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மேற்கொள்ளலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒருமுறை அதாவது one-off உதவியானது, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 22 மில்லியன் மலேசியர்களுக்கு பயனளிக்கும் என்று நிதியமைச்சின் கார்ப்பரேட் தொடர்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்ததன்படி, MADANI அரசு இந்த 100 ரிங்கிட் உதவித்தொகையை வழங்குகிறது.

இந்த தொகை 2026 பிப்ரவரி 9 முதல் MyKad வழியாக பெறுநர்களின் கணக்கில் செலுத்தப்படும். அதே நேரத்தில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசிய குடிமக்கள், குறிப்பாக MyKad வைத்திருப்பவர்கள் இதற்குத் தகுதி பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், மாதாந்திர SARA உதவி பெறுவோரும் இந்த 100 ரிங்கிட் உதவியைப் பெற தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!