
மலேசியாவில் காசநோய் அதிகரிப்பு; ஐந்தாவது வாரத்தில் 2,571 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர், பிப்ரவரி-11,
நாட்டில் TB எனப்படும் காசநோய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இவ்வாண்டு தொடங்கிய ஐந்தாவது வாரத்திலேயே அதாவது பிப்ரவரி 1 முதல் 7 வரையில் மட்டுமே, மொத்தம் 2,571 TB நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.
இது கடந்தாண்டின் இதே காலகட்டத்தில் பதிவான 2,342 சம்பவங்களுடன் ஒப்பிடும்போது, சுமார் 10 விழுக்காடு உயர்வாகும் என சுகாதார அமைச்சான KKM கூறியது.
இந்த காசநோய் _mycobacterium tuberculosis_ என்ற பாக்டீரியா கிருமியால் ஏற்படுகிறது.
இது காற்று வழியாக பரவுகிறது.
குறிப்பாக பள்ளிகள், சிறைச்சாலைகள், வேலையிடங்கள் போன்ற கூட்டம் அதிகமான இடங்களில் நோய்ப் பரவலுக்கான வாய்ப்பு அதிகமுள்ளது.
எனவே, நிற்காத இருமல், காய்ச்சல், இரவு வியர்வை, உடல் எடை குறைதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்யுமாறு KKM பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
நோயாளிகள் முழுமையான சிகிச்சையை முடிக்க வேண்டும் என்பதையும் அமைச்சு நினைவுறுத்தியது.



