Latestமலேசியா

ஈப்போவில் போலீஸ் ரோந்து வாகனத்துடன் கார் மோதல்; 3 வயது குழந்தை பலி, மூவர் காயம்

ஈப்போவில் போலீஸ் ரோந்து வாகனத்துடன் கார் மோதல்; 3 வயது குழந்தை பலி, மூவர் காயம்

ஈப்போ, பிப்ரவரி-11,

பேராக், ஜாலான் ஈப்போ-லூமூட் சாலையில் 2 வாகனங்களை உட்படுத்திய விபத்தில் 3 வயது பெண் குழந்தை பலியான வேளை, மேலும் மூவர் காயமடைந்தனர்.

நேற்று பிற்பகல் 3 மணிக்கு மேல் பெண்ணொருவர் ஓட்டிச் சென்ற Perodua Kelisa கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, எதிர் திசையில் புகுந்து போலீஸ் ரோந்து வாகனமான Honda Civic-க்கை மோதியதாக ஈப்போ போலீஸ் கூறியது.

இதனால் 2 கார்களிலும் இருந்த 4 பேரும் காயமடைந்து ராஜா பெர்மாய்சூரி மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.

அவர்களில், 3 வயது குழந்தை Chong Zee Han மாலை 4.30 மணிக்கு உயிரிழந்தது உறுதிச் செய்யப்பட்டது; 34 வயது தாயான Wong Mee Gee முகத்தில் காயங்கள் ஏற்பட்டன.

போலீஸ் ரோந்து வாகனத்திலிருந்த 2 போலீஸ்காரர்களுக்கு காலிலும் தோள்பட்டையிலும் காயமேற்பட்டது.

விபத்து குறித்து மேல் விசாரணை நடைபெறுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!