Latestமலேசியா

செனாவாங்கில் ஆற்றுக்குள் கார் பாய்ந்து ஆடவர் பலி

செனாவாங்கில் ஆற்றுக்குள் கார் பாய்ந்து ஆடவர் பலி

செனாவாங், பிப்ரவரி-18,

செனாவாங், சுங்கை காடுட்டில் (Sungai Gadut) ஓர் இடைநிலைப் பள்ளியின் முன்புறமுள்ள ஆற்றில் நேற்று மாலை கார் விழுந்ததில், அதன் ஓட்டுநரான 25 வயது இளைஞர் மூழ்கி உயிரிழந்தார்.

தகவல் கிடைத்து செனாவாங் மற்றும் ரந்தாவ் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 14 வீரர்கள் சம்பவ இடம் விரைந்தனர்.

காருக்குள் இருந்து மீட்கப்பட்ட சடலம் மேல் நடவடிக்கைக்காக போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டது.

விபத்துக்கான காரணம் விசாரிக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!