Latest

பிளாஸ்டிக் பொருட்களை அரைக்கும் சட்டவிரோத தொழிற்சாலை-1.9 மில்லியன் ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்

பிளாஸ்டிக் பொருட்களை அரைக்கும் சட்டவிரோத தொழிற்சாலை-1.9 மில்லியன் ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்

சிரம்பான், பிப்ரவரி-19,

பிளாஸ்டிக் பொருட்களை அரைக்கும் சட்டவிரோத தொழிற்சாலையில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் 557,000 ரிங்கிட் மதிப்புள்ள 115 டன் கறுப்பு நிற கார்பன் தூள் பறிமுதல் செய்யப்பட்டது.

செனவாங் தொழில்துறை பகுதியில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் முறையாக சோதனை நடத்தப்பட்ட போதிலும் அது தொடர்ந்து செயல்பட்டதால் இரண்டாவது முறையாக கடந்த திங்கட்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்ஷப்னி அகமட் ( Alzafny Ahmad ) தெரிவித்தார்.

இந்த தொழிற்சாலையில் பிளாஸ்டிக் பொருட்களை அரைக்கும் மூன்று இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 1.9 மில்லியன் ரிங்கிட்டாகும்.

மின்னணு கழிவுகள் தொடர்பான நடவடிக்கைகளை அந்த சட்டவிரோத தொழிற்சாலை மேற்கொண்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அல்ஷப்னி அகமட் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!