Latestமலேசியா

ஏரியில் விழுந்த தாய் மற்றும் குழந்தைகள் மீட்பு; இளைஞர்களின் வீரச் செயலைப் பாராட்டிய பிரதமர்

சுங்கை பூலோ, பிப்ரவரி-26-சுங்கை பூலோ அருகிலுள்ள Kundang, Tasik Biru-வில், ஏரிக்குள் விழுந்த காரில் சிக்கியிருந்த ஒரு தாய் மற்றும் அவரது இரண்டு பெண் பிள்ளைகளை காப்பாற்றிய 7 இளைஞர்களின் வீரச் செயலை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இச்சம்பவம் நள்ளிரவு நேரத்தில் நடந்தது.

திடீரென கார் ஏரிக்குள் விழுந்ததால், தாய் மற்றும் குழந்தைகள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

அதை கண்ட, அருகில் இருந்த இளைஞர்கள் உடனடியாக செயல்பட்டனர்.

உடனடியாக அவர்கள் மனித சங்கிலி அமைத்து ஏரிக்குள் இறங்கி, 3 மற்றும் 6 வயதுடைய குழந்தைகளுடன் தாயையும் பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர்.

மூவரும் சுங்கை பூலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.

அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இளைஞர்களின் அந்த துணிச்சலும் மனிதாபிமானமும் மலேசியர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது என பிரதமர் கூறினார்.

அக்குடும்பம் சீக்கிரமே குணமடையவும் பிராத்திப்பதாக அன்வார் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!