Latestமலேசியா

தைவானில் உணவக ‘ஃப்ரீசரில்’ சிக்கிய 69 வயது பெண் பலி

தைவான், பிப்ரவரி 26-தைவான் தைப்பெய் (Taipei) நகரில் உள்ள ஒரு உணவகத்தில், உறையவைக்கும் குளிர்சாதான பெட்டிக்குள் 69 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

கடந்த திங்கட்கிழமை இரவு வெளியேறிய அவர், சுமார் 30 ஆண்டுகளாக வேலை செய்து வந்த உணவகத்திற்குத் திரும்பியுள்ளார்.

அங்கு ஃப்ரீசர் பெட்டிக்குள் நுழைந்து உள்ளிருந்து பூட்டிக் கொண்டதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

அடுத்த நாள் காலை 10 மணியளவில் பெட்டி திறக்கப்பட்டபோது, சுமார் 12 மணி நேரமாக -10 செல்சியசுக்கும் குறைந்த வெப்பநிலையில் இருந்த அவர் உயிரிழந்திருந்தார்.

இந்தச் சம்பவத்தில் குற்றச்செயல் சான்றுகள் எதுவும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இருந்தபோதும் மேல் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!