
ரவூப். பிப்ரவரி-26-பஹாங், ரவூப்பில் இன்று அதிகாலை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்தனர்.
கம்பூங் பாமா குலாட் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
போலீஸாருக்கு அதிகாலை 3.35 மணிக்கு தகவல் கிடைத்தது.
தீ அணைக்கப்பட்ட பின் உடல்கள் வீட்டின் உள்ளே கண்டுபிடிக்கப்பட்டதாக ரவூப் போலீஸ் கூறியது.
சடலங்கள் ரவூப் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
தீயில் வீழு 100 விழுக்காடு சேதமடைந்த வேளை, 3 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்களும் எரிந்து சாம்பலாயின.
தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது.
இந்த துயரச் சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



