Latestமலேசியா

முன்னாள் மனைவியின் காரைப் பிடித்து தொங்கிய ஆடவர் கைது

ஜோகூர் பாரு, மார்ச்-1-ஜோகூர் பாரு, பண்டார் ஸ்ரீ ஆலாமில் முன்னாள் மனைவியின் காரைப் பிடித்து தொங்கிச் சென்ற ஆடவர் கைதாகியுள்ளார்.

நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு, அங்குள்ள சூப்பர் மார்க்கெட் முன்பு ஏற்பட்ட வாக்குவாதத்திலிருந்து அச்சம்பவம் தொடங்கியது.

30 வயது அவ்வாடவர், காரின் போனட்டில் ஏறி கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்; எனினும் சில நிமிடங்களில் பிடி நழுவி அவர் சாலையில் விழுந்தார்.

முன்னாள் மனைவியோ, சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு காரை மெதுவாக ஓட்டிச் சென்ற போது, சந்தேக நபரின் நண்பர்கள் என கருதப்படும் கும்பல் அவரை இடைமறித்தது.

காரை ஜன்னலை உடைத்து, அப்பெண்ணை மிரட்டியும், பொருட்களை பறித்தும் அக்கும்பல் தப்பிச் சென்றது.

கைதான நபர் கெத்தமின் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததும் சோதனையில் உறுதிச் செய்யப்பட்டது.

விசாரணைக்காக அவர் தற்போது 7 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!