
கூச்சிங், மார்ச்-2-சரவாக் பிந்தாங்கோரில், பள்ளி மாணவியுடன் பாலியல் விவகாரத்தில் சிக்கி, 39 வயது ஆசிரியர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
மாணவி தொடர்ந்து பள்ளிக்கு மட்டம் போட்டதை அடுத்து பள்ளி நிர்வாகம் உள் விசாரணை நடத்தியதில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
விஷயம், குடும்பத்தாருக்குத் தெரியப்படுத்தப்பட்டதும், மாணவியின் தாயார் போலீஸில் புகாரளித்தார்.
அதன் அடிப்படையில் ஆசிரியர் கைதானதாக போலீஸார் கூறினர்.
பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை பாதுகாக்கும் வகையில், போலீஸார் கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை.



