Latestஉலகம்

பிரிமியர் லீக்கின் முதல் 3 இடங்களுக்கு முன்னேறிய மென்செஸ்டர் யுனைடெட்

 

மென்செஸ்டர், மார்ச் 2 -ஞாயிற்றுக்கிழமை ஓல்ட் டிராபோர்டில் நடைபெற்ற பிரிமியர் லீக் ஆட்டத்தில் Manchester United 2-1 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் ( Crystal Palace )கிளப்பை வென்றதன் மூலம் லீக் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் ஒன்றை பெற்றுள்ளது.

இந்த ஆட்டத்தில் மென்செஸ்டரின் வெற்றி கோலை Benjamin Sesko அடித்து அதன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினார். அதற்கு முன்னதாக மென்செஸ்டர் குழுவுக்கான முதல் கோலை புருனோ பெர்னான்டஸ் அடித்தார்.

ஆயிரக்கணக்கான தனது ரசிகர்களில் முன்னிலையில் நடைபெற்ற முக்கியமான இந்த ஆட்டத்தில் வெற்றியை பதிவு செய்ததன் மூலம் பிரிமியர் லீக் பட்டியலில் மூன்றாவது இடத்தில் மென்செஸ்டர் தற்போது இருந்து வருகிறது.

இந்த வெற்றியினால் மென்செஸ்டர் யுனைடெட் கிளப்பின் தலைமைப் பயிற்சியாளரான Michael Carrick மகிழ்ச்சிஅடைந்துள்ளார். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் Michael Carrick கின் பெயரை உச்சரித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

44 வயதுடைய Michael Carrick ஜனவரி 5 ஆம் தேதி ரூபன் அமோரிம் நீக்கப்பட்ட பிறகு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது முதல் மென்செஸ்டர் கிளப்பை ஆறு வெற்றிகளுக்கும் ஒரு டிராவிற்கும் இட்டுச் சென்றுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!