
கொழும்போ,மார்ச்-5-அமெரிக்கக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல், ஈரானியப் போர்க்கப்பல் IRIS Dena‑வை இலங்கை அருகே சுட்டு வீழ்த்தியது.
இதில் 87 கடற்படையினர் உயிரிழந்ததாகவும், பலர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியப் பெருங்கடலில் இதனால் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.
இந்தியாவில் நடைபெற்ற கடற்படை பயிற்சியில் பங்கேற்று திரும்பியபோது ஈரானியப் போர்க்கப்பல் மீது இத்தாக்குதல் நடந்தது.
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, நீர்மூழ்கிக் கப்பல் மூலம் போர்க்கப்பல் அழிக்கப்பட்ட முதல் சம்பவம் இதுவாகும்.
இந்த ஆகக் கடைசி சம்பவத்தால் இந்தியப் பெருங்கடல் கப்பல் போக்குவரத்து பாதைகள் ஆபத்தில் உள்ளன.
இது உலகளவிலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.



