Latestமலேசியா

கெடாவில் மனைவி மற்றும் குழந்தையுடன் ஆபத்தான முறையில் சாகசம் செய்த மோட்டார் சைக்கிளோட்டி கைது

அலோர் ஸ்டார், ஜூலை-23-கெடா, Dataran Medan Bandar அருகே Darul Aman சாலையில் தமது மனைவி மற்றும் நான்கு வயது மகளை ஏற்றிக் கொண்டு, ஆபத்தான முறையில் சாகசம் செய்த மோட்டார் சைக்கிளோட்டி கைது செய்யப்பட்டார்.

நீல நிற ஹோண்டா EX5 மோட்டார் சைக்கிளுடன் அந்நபர் பிடிபட்டதாக Kota Setar மாவட்ட காவல் நிலையத் தலைவர் உதவி ஆணையர் Syed Basri Syed Ali தெரிவித்தார்.

மேல் விசாரணைக்காக அவரது மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அச்சம்பவம் 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட ஆடவர் முன்னும் பின்னர் இருவர் அமர்ந்திருக்க, மோட்டார் சைக்கிளின் முன் சக்கரத்தை உயர்த்தி ஆபத்தான முறையில் சாகசம் செய்வது போன்ற 17 வினாடிகள் கொண்ட காணொளியொன்று பரவியதைத் தொடர்ந்து முன்னதாக புகார் கிடைத்தது.

அந்த மோட்டார் சைக்கிள் Aman Sentralலில் இருந்து Pekan Melayu நோக்கிச் சென்று கொண்டிருந்தது தெரிய வந்தது. அவ்வாடவர் தமது 25 வயது மனைவி மற்றும் நான்கு வயது மகளுடன் இரவு உணவுக்காகச் சென்று கொண்டிருந்த போது அச்சம்பவம் நிகழ்ந்ததும் கண்டறியப்பட்டதாக Syed Basri விளக்கினார்.

அந்நபரின் சாகசச் செயல், அவருக்கு மட்டுமல்லாது முன்புறமும் பின்புறமும் அமர்ந்திருந்த இரு பயணிகள் மற்றும் பிற சாலைப் பயனீட்டாளர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்றும் அவர் எச்சரித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!