Latestமலேசியா

மத்திய கிழக்கு பதற்றம்: எண்ணெய் விலை $100-ரை எட்டும் அபாயம்

கோலாலம்பூர், மார்ச்-6-மத்திய கிழக்கில் நடக்கும் மோதல் மேலும் தீவிரமானால், உலகளாவிய எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலரைத் தாண்டும் வாய்ப்பிருப்பதாக, எரிசக்தி ஆய்வு நிறுவனமான Rystad Energy எச்சரித்துள்ளது.

அப்பகுதியில் அண்மையில் நடந்த ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி கட்டமைப்புகள் பெரும் ஆபத்தில் உள்ளன.

இதனால் உலக எண்ணெய் சந்தையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இதன் விளைவாக Brend கச்சா எண்ணெய் விலை சுமார் 3 விழுக்காடு உயர்ந்து, ஒரு பீப்பாய்க்கு 83 அமெரிக்க டாலரை நெருங்கியுள்ளது.

இந்நிலையில், இந்த மோதல் சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு சிற்றரசு போன்ற முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கும் பரவினால், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பெரிய பாதிப்பு ஏற்படலாம் என நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதனால் எரிபொருள் விலை, போக்குவரத்து செலவு மற்றும் அன்றாட பொருட்களின் விலையும் உயரக்கூடும் என்று பொருளாதார நிபுணர்களும் எச்சரிக்கின்றனர்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!