
செப்பாங், மார்ச்-7-செப்பாங், KLIA 2 முனையத்தின் சேவை முகப்பிடத்தில் ஆடவர் ஒருவர் சுயஇன்பத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகியுள்ளது.
இந்த அநாகரீகச் செயல் நேற்று வெள்ளிக்கிழமை நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
Threads சமூக ஊடகத்தில் பதிவேற்றப்பட்ட 8 வினாடி வைரல் வீடியோவின் கீழ், முதலில் அந்நபர் வாடிக்கையாளர் சேவை முகப்பிடத்தில் தொந்தரவு செய்ததாகவும் பின்னர் சுயஇன்பத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.
அதிர்ச்சியடைந்த அதிகாரி ஒருவர் அவ்வாடவரை வீடியோ எடுப்பதும் தெரிகிறது.
எனினும், அவர் கைதுச் செய்யப்பட்டாரா இல்லையா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை இல்லை.



