Latestமலேசியா

42 பற்களுடன் கின்னஸ் உலக சாதனை படைத்த மலேசிய இளைஞர் பிரதாப் முனியாண்டி

கோலாலம்பூர், மார்ச்-7-மலேசியாவைச் சேர்ந்த பிரதாப் முனியாண்டி என்ற 33 வயது இளைஞர், ஆண்களில் அதிகமான பற்கள் கொண்டவராக கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

பொதுவாக ஒரு மனிதருக்கு 32 பற்கள் தான் இருக்கும்; ஆனால் பிரத்தாப்புக்கோ மொத்தம் 42 பற்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

2021-ஆம் ஆண்டு குடும்பத்தினருடனான ஒரு நிகழ்வில் இருந்தபோதே, தன்னிடம் அதிக பற்கள் இருப்பதை அவர் முதலில் கவனித்தார்.

அப்போது 38 பற்கள் இருந்ததாக எண்ணப்பட்ட நிலையில், பின்னர் எடுக்கப்பட்ட X-Ray பரிசோதனையில் இன்னும் 4 பற்கள் உள்ளே இருப்பது தெரியவந்தது.

2023-ஆம் ஆண்டுக்குள் அந்த பற்களும் முழுமையாக வளர்ந்து, அவரது மொத்த பற்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்தது.

ஆனால், இந்த கூடுதல் பற்களால் தினசரி வாழ்க்கையில் இவருக்கு எந்தவித சிக்கலும் இல்லை;

அவை இயல்பாகவே வளர்ந்துள்ளதாகக் கூறும் பிரதாப், தானே கூறாத வரை பலரும் அவற்றை கவனிப்பதால்லை என்றார்.

இவ்வாறு மலேசியாவைச் சேர்ந்த ஒருவர் அதுவும் பற்கள் எண்ணிக்கையில் உலக சாதனை படைத்திருப்பது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!