Latestஉலகம்

சீனாவில் வாத்தின் வயிற்றில் தங்கம்; 1,800 அமெரிக்க டாலர் மதிப்பு

ஹூனான், மார்ச்-8 – சீனாவில் வியப்பூட்டும் ஒரு சம்பவத்தில் ஓர் ஆடவர் சமைக்க வாங்கிய வாத்தின் வயிற்றில் 10 கிராம் தங்கத் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அவற்றின் மதிப்பு சுமார் 1,800 அமெரிக்க டாலராகும்.

தங்கச் சுரங்க ஆற்றுக்கு அருகே அமைந்துள்ள கிராமம் என்பதால் ஏற்கனவே அங்குள்ள மக்களில் சிலருக்கு இந்த அனுபவம் உண்டு என்றாலும், இவ்வளவு அதிகமாக தங்கம் கிடைத்தது இதுவே முதன்முறை என Liu எனும் அவ்வாடவர் கூறினார்.

இது சீனப்புத்தாண்டின் நல்லதொரு தொடக்கம் என்றும் அவர் வருணித்தார்.

பொதுவாக வாத்துகள் செரிமானத்திற்காக சிறு கற்களை விழுங்கும்.

ஆனால் இம்முறை இந்த வாத்து உண்மையான தங்கத்தையே விழுங்கியுள்ளது.

இதையடுத்து ‘தங்க வாத்து’ என்ற பெயரில் இந்த செய்தி இணையத்தில் வைரலாகி, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!