Latestமலேசியா

நடிகர் சத்தியாவிற்கு RM10,000 நிதி உதவி வழங்கினார் துணைப் பிரதமர் சாஹிட் ஹமிடி ஹமிடி

அம்பாங், மார்ச்-12 – மூத்த நகைச்சுவை நடிகர் சத்தியா, உடல் நலக் குறைவால் அம்பாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி அவருக்கு RM10,000 நிதி உதவி வழங்கியுள்ளார்.

துணை பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி மூலம் இவ்வுதவி வழங்கப்பட்டது.

குடும்பம் எதிர்கொண்ட சிகிச்சைச் செலவுகள் குறித்து தகவல் கிடைத்ததும், உடனடியாக உதவி செய்ய சாஹிட் உத்தரவிடப்பட்டதாக அர்விந்த் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்…

இந்நிலையில், 62 வயது சத்தியாவின் உடல்நிலை தற்போது மேம்பட்டு வருவதாகவும், அவர் விழித்திருப்பதாகவும் சக நடிகரும் குடும்ப நண்பருமான ஜகன் தெரிவித்தார்.

ஆனால், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு அவசியம் என்றார் அவர்.

இவ்வேளையில், , சத்தியாவின் மகள் ஆமனி, உதவி செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

மேலும், சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தால், சுமார் 6 முதல் 8 மாதங்களில் தந்தை மீண்டும் நடிப்பிற்கு திரும்புவார் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நீரிழிவு நோயால் ஏற்கனவே இடது கால் முட்டிக்குக் கீழ் துண்டிக்கப்பட்ட சத்தியா, சில தினங்களுக்கு முன்னர் மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!