
புத்ரா ஜெயா, மார்ச் -13- நிர்வாக நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை விரிவாக மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்க சேவை ஊழியர்களின் உயர் தலைவர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தியிருப்பதாக தொடர்பு அமைச்சர் டத்தோ பாமி பாட்ஷில்
( Fahmi Fadzil) தெரிவித்தார்.
கொள்கையின் சாத்தியக்கூறு மற்றும் ஒருங்கிணைப்பை ஆய்வு செய்யும்படி அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் மற்றும் பொதுச் சேவைத் துறையின் தலைமை இயக்குனர் ஆகியோருக்கு பிரதமர் பணித்துள்ளார்.
வீட்டிலிருந்தவாறு வேலை செய்யும் உத்தரவை இன்று செய்தியாளர் சந்திப்பின்போது அரசாங்க பேச்சாளருமான பாமி உறுதிப்படுத்தினார்.
மேலும் இந்த நடவடிக்கை பொதுச் சேவை செயல்திறனைப் பராமரிக்கும் அதே வேளையில் செயல்பாடுகளை நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பல விவகாரங்கள் ஒருங்கிணைக்கப்படுவதை உறுதிசெய்ய வீட்டிலிருந்தவாறு வேலை செய்யும் ஆய்வின் முடிவுகள் விரைவில் விவாதிக்கப்பட்டு வரும் செவ்வாய்க்கிழமை
மார்ச் 17 ஆம் தேதி ஒரு முடிவு எட்டப்படும்” என்றும் அவர் கூறினார்.



