Latestஉலகம்

ஈரானில் அமெரிக்காவின் புதிய வான்தாக்குதல்; மத்திய கிழக்கில் பதற்றம்

தெஹ்ரான், மார்ச்-14 – அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால், மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அமெரிக்கப் படைகள் ஈரானின் மிக முக்கியமான Kharg தீவில் புதிய வான்தாக்குதலை நடத்தியுள்ளதாக, அதிபர் டோனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

என்றாலும், அத்தாக்குதலில் இராணுவ இலக்குகள் மட்டுமே குறிவைக்கப்பட்டதாகவும், எண்ணெய் வளங்களும் கட்டமைப்புகளும் சேதமடையாமல் விடப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கடந்த சில நாட்களாக ஈரானின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் பல இடங்களில் வான்தாக்குதல்கள் நடைபெற்ற நிலையில், தற்போது இந்த Kharg தீவில் அமெரிக்கா குண்டுகளை வீசி வருகிறது.

இதனிடையே உலக வர்த்தகத்திற்கு முக்கியமான கடல் பாதையான Hormuz நீரிணையில் கடற்படை மோதல் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஈரான் தரப்பும் இந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கலாம் என எச்சரித்துள்ளதால், மத்திய கிழக்கு முழுவதும் பாதுகாப்பு குறித்த கவலை அதிகரித்துள்ளது.

இந்த மோதல் மேலும் விரிவடையும் வாய்ப்பு இருப்பதாக அனைத்துலக சமூகமும் கவலை தெரிவித்து வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!