Latestமலேசியா

இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களை சட்டப்பூர்வமாக்கும் வழிமுறைகள் இறுதிச் செய்யப்பட்டன

புத்ராஜெயா, மார்ச்-15-RIBI எனப்படும் இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களை சட்டப்பூர்வமாக்கும் வழிமுறைகளை அரசாங்கம் இறுதிச் செய்துள்ளது.

PLANMalaysia மூலம் தயாரிக்கப்பட்டு, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபாடில்லா யூசோஃப் தலைமையில் நடைபெற்ற ஊராட்சி மன்றங்களுக்கான தேசிய மன்றத்தின் 87-ஆவது கூட்டத்தில் அது விவாதிக்கப்பட்டது.

இந்நடவடிக்கை, மத வழிபாட்டுத் தலங்கள் சீரான திட்டமிடலுடன் அமைக்கப்படுவதையும், சமூக ஒற்றுமையை பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

இது நடைமுறைக்கு வந்ததும், கோவில் நிலப் பிரச்சனைக்கு நீண்ட கால தீர்வு ஏற்படும் என நம்பப்படுகிறது.

அதே கூட்டத்தில், சிறிய குப்பை வீச்சுக்கு எதிரான சமூக சேவை உத்தரவு பற்றியும் பேசப்பட்டது.

ஜனவரி முதல் மார்ச் 10 வரை, 1,001 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன; இதில் 213 வெளிநாட்டவர்கள் அடங்குவர்.

மேலும், கட்டட மாற்ற வேலைகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, இது கட்டட பாதுகாப்பு மற்றும் இயற்கை காற்றோட்டத்தை உறுதிச் செய்கிறது.

உணவகங்களில் எண்ணெய், கொழுப்பு, கிரீஸ் (FOG) கழிவுகளை கட்டுப்படுத்தும் எண்ணெய் வடிகட்டி பயன்பாடும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது நீர் மாசுபாட்டைத் தடுக்கும்.

மொத்தத்தில், இம்முயற்சிகள் நகர திட்டமிடலை ஒழுங்குபடுத்தவும், சுத்தம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்தவும் அரசின் உறுதியை வெளிப்படுத்துவதாக துணைப் பிரதமர் கூறினார்.

 

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!